Categories
சினிமா தமிழ் சினிமா

“காசு வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்துடுமா வரும”…. இணையத்தை கலக்கும் பிரபுதேவாவின் விழிப்புணர்வு பாடல் …!!

தேர்தல் குறித்து பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும், முக்கிய அதிகாரிகளும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் பிரபல நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவா தேர்தல் குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |