60 வயதான முதியவர் ஒருவர் கரண்டு கம்பத்தில் ஏறி தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று ஆர்பாட்டம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் சோப்ரா என்ற 60 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனக்கு அறுபது வயது ஆகிறது இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கோரி 11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறி தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் இங்கு இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து செய்வதறியாது திகைத்த அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் அனுப்பிக் மின்சாரத்தை முதலில் துண்டித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை சமாதானம் செய்து கீழே இறங்க வைத்தனர்.