Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கையில் முகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்புவனம் பகுதியில் உள்ள நரிக்குடி ரோடு, நான்குவழிச் சாலை, திருப்புவனம் நகரில் உள்ள மெயின்ரோடு, வைகை ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம், வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதா மணி அறிவுறுத்தலின்படி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அங்கு முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடமும், முககவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் மொத்தம் ரூ.2100 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அங்கு முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் முககவசம் கண்டிப்பாக அணிந்து வருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Categories

Tech |