தீவிர சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 மஹிந்திரா தாரை, சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படி பலமுறை வெளிவரும் தார் மாடல் வரிசையில் இப்போது புதியதாக தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதையும். தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் அமைப்பை கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. புதிய அம்சங்கள் பல வழங்கப்பட்டாலும், இதன் தோற்றம் பழைய ஜீப் போன்றே காணப்படுகிறது.
டி.யு.வி.300 மற்றும் ஸ்கார்பியோ மாடலில் பயன்படுத்தப்பட்ட “மூன்றாம் தலைமுறை” சேசிஸ்யே இந்த புதிய ஜீப்-ற்கும் பயன்படுத்தப்பட்டுளது. இந்த புதிய மஹிந்திரா தார் ஜீப்பில், முன்புறம் மெல்லிய கிரில்லும், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களும் உள்ளது, மேலும் உள்புறமாக புதிய டேஷ்போர்டு வசதியும், பெரிய தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் உள்ளது. பாதுகாப்பு வசதிகளாக ஏ.பி.எஸ்., இ.பி.டி-யும், முன்புறம் டூயல் ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டரும், ஹை-ஸ்பீட் அலெர்ட் சிஸ்டமும், பின்புறமாக பார்க்கிங் சென்சார் வசதியும் உள்ளது. பி.எஸ்.6 புகை விதிகளுக்கு ஏற்றதாக புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் உள்ளது.
மஹிந்திரா “தார்” மாடல் தற்போது 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.6.72 லட்சத்தில் தொடங்கி,டாப் மாடல் விலையாக ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம்). மஹிந்திரா “தார் 2020” மாடலின் ஆரம்ப விலை ரூ. 7.5 லட்சத்தில், தொடங்கி டாப் மாடல் விலையாக ரூ.11.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.