Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படத்தில் பாடல் பாடிய சிம்பு… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர். இவர் நடிக்கும் படங்களிலும் பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்கள் பாடி சிம்பு அசத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கடகிருஷ்ணா  ரோக்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ,மோகன்ராஜா, மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இன்று இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ‘முருகா’ என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு பாடி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . இதனால் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |