Categories
சினிமா தமிழ் சினிமா

டெடியாக நடித்தது இவர்தான்…. ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

நடிகர் ஆர்யா டெடி படத்தில் யார் டெடியாக நடித்திருந்தார் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார். மேலும் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த டெடி பொம்மை கதாபாத்திரம் காண்போரை ரசிக்கும் படி செய்கிறது.

அந்த டெடியின் குரலும், அதன் செய்கையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெடி படத்தில் யார் டெடியாக நடித்து இருந்தார் என்ற தகவலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “ரெடி படத்தில் நடித்திருப்பது மிஸ்டர் கோகுல். இவர் மேடை நாடக நடிகர். இவர்தான் டெடி பொம்மை கூறிய ஆடையை அணிந்து அதன் உடல் மொழியை போல நடித்திருந்தார். ஆனால் டெடியின் தலை மட்டும் 3டி முறையில் உருவாக்கப்பட்டு பர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜி மூலம் படமாக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |