மல்யுத்தப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் ரித்திகா போகாட்(17). இவர் மல்யுத்த போட்டியின் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
போகாட் சகோதரிகள் (தங்கல் படம் இவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டது) பல சாதனைகள் புரிந்து வரும் நிலையில், ரித்திகா போகாட் மரணம் ராஜஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.