Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேலைக்கு சேர்க்கணும் … நிரந்தர ஊதியம் வேண்டும்… உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்கள்…

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  தலைமை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

அப்பொழுது வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை  மீண்டும் வேலைக்கு சேர்ப்பது மற்றும் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது மேலும்  தேர்தலுக்குப் பின் கலெக்ட்டர் அறிவித்த 410 புதிய சம்பளமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில்  முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தை களைத்து தொழிலார்கள்  அங்கிருந்து சென்றனர்.

Categories

Tech |