சிவகங்கை கொந்தகையில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 5 கட்டங்களாக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழடியிலும் அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் சென்ற வருடம் நடைபெற்றது. அதில் 2500 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய அடையாளங்களாக பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியுள்ளது. இதில் மணிகள், பாசி, பானை ஓடுகள், சில்லுவட்டுக்கள் ஆகியவை முதலில் தோண்டப்பட்ட குழியில் கிடைத்தது. அதனை தொடர்ந்து இரண்டு குழிகள் தோண்டப்பட்டு கொந்தகையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டாவது ஆழம் தோண்டிய போது முதுமக்கள் தாழி 4 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையிலும், இரண்டு முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் அகலமான வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இந்த முதுமக்கள் தாழி மேல் பகுதி சுருங்கியும், கீழ்ப்பகுதி அகலமாகவும், மூடி சிறிய அளவிலும் காணப்படுகிறது. அதேபோல் அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சிறிய பானையும், வித விதமான மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் , முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தார்.