பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாதலை கண்டித்து பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை கண்டித்து பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. 350 வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம்.களை நாடியுள்ளனர்.