Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தற்போதய முதலமைச்சரால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி. மீண்டும் அவரை போட்டியிடும் இந்த தொகுதியில் விவசாயமும் விசைத்தறியில் முக்கிய தொழிலாகும். எடப்பாடியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பாமக 3 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி மொத்தம் 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர்.

விசைத்தறியும், விவசாயமும் நலிவடைந்ததால் கூலி வேலைக்கு பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். விசைத்தறி தொழிலுக்கு தேவைப்படும் நூல் விலை உயர்ந்ததும், சாய தொழிற்சாலைகளும் இல்லாததும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் தொழிற்பேட்டை தேவை என்பது மக்களின் கோரிக்கை.

கிராமப்புற சாலைகள் சீர் அமைக்கப்படாமல் உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாம்பழங்கள் உற்பத்தி அதிகமாக உள்ள பகுதி என்பதால் மாம்பழக்கூழ் தொழிற்சாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் எடப்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் ஜலகண்டபுரம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மேட்டூர் உபரி நீரை கொண்டு ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் பெரும்பாலான பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதாக தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் தொகுதியாக இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லை என்பது எடப்பாடி தொகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.

Categories

Tech |