உத்திரபிரதேசத்தில் வீட்டின் முன்பு காயப்போட்டிருந்த உள்ளாடையை இளைஞர்கள் வேடிக்கையாக திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் சதார் காவல் நிலைய பகுதியில் சஞ்சய் சவுத்ரி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை கேட்ட போலீசார் திகைத்து போயினர்.அதில் , என் மகளின் உள்ளாடைகளை துவைத்து எங்கள் வீட்டின் முன் காயவைத்து இருந்தோம் . அதனை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அதைஒரு உள்நோக்கத்துடனே திருடி இருக்கவேண்டும் .அந்த வீடியோ என்னிடத்தில் உள்ளது . அவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் போலீசில் ஒப்படைத்த வீடியோவில் , வாலிபர்கள் இருவர் ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக வந்து சஞ்சய் சௌத்ரியின் வீட்டு வாசலின் முன்பு நின்றனர் . ஒரு வாலிபன் ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போடும்போது பின்னால் அமர்ந்திருந்த வாலிபன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கி வீட்டின் முன் காயப்போட்டிருந்த உள்ளாடையை எடுத்தார். அதன்பிறகு அங்குயிருந்து இருவரும் புறப்பட்டு சென்றுவிட்னர். அதனையடுத்து போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த வாலிபர்களின் பெயர் முகமது ரோமின் மற்றும் முகமது அப்துல் என்றும் வேடிக்கைக்காக உள்ளாடையை திருடியாதகவும் கூறியுள்ளனர். அதனால் போலீசார் அவர்கள் மீது திருட்டு மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சச்சின் குப்தா என்ற ஊடகவியலாளர் இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது . அந்த வாலிபர்களின் விசித்திர செயலைக் கண்டித்து சிலர் திட்டியும், கிண்டலடித்தும் ,தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் .