Categories
சினிமா தமிழ் சினிமா

லேட் ஆகுறதுக்கு இது தான் காரணம்…. தாமதமாகும் இந்தியன்2 ஷூட்டிங்…. காஜல் அகர்வால் பேட்டி…!!

இந்தியன் 2 படபிடிப்பு ஏன் தாமதமாகிறது என்பதற்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சிந்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஓராண்டு ஆகியும் இன்னும் இந்தியன் 2 படம் தொடங்கப்படவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியன் 2 படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால்  அவர்களால் இந்தியாவிற்கு வர முடியவில்லை. இதனால்தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |