தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவினால் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் பல இடங்களில் போடப்பட்டு வந்தாலும் தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலிலும் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே மிகுந்த பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்துகொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின் முடிவுகள் பொருத்து மீண்டும் ஒரு ஊரடங்கு அமல் படுத்தப் படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.