குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர் கூறுகின்றனர்.
ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரவில்லை என்பதால் அத்திரமடைந்த மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் , அவ்வாறு செய்து தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என வாக்கு கேட்க வரும் வேட்பாளர்களிடம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.