Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி 3 இப்படிதான் உருவாக போகுதா…. ராஜமவுலி போட்ட திட்டம்…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

பாகுபலி 3 திரைப்படம் எப்படி உருவாகப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகை நடிகர்கள் தங்களது கம்பீரமும், வீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் பாகுபலி படத்தின் இரண்டு பாகமும் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இது திரை உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் பாகுபலி மூன்றாம் பாகம் எப்படி உருவாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராஜமவுலி பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இதனை ஒரு படம் போல் எடுக்காமல் 9 தொடர்களாக எடுத்து ஓடிடியில் வெளியிடலாம் என்றும் திட்டமிடபட்டுள்ளதாம். திரைப்படமாக எடுத்தால் நீண்ட வருடங்கள் ஆகலாம் என்பதால் 200 கோடி பட்ஜெட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பாகுபலி திரைப்படத்திற்கான அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |