இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக திமுக MP_க்கள் மக்களவையில் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பதிலளித்து பேசிய தமிழிசை , தமிழ் முதுமொழி என்று எல்லோராலும் அறியப்பட்ட மொழி. இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.