திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால், தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் .
மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . இந்நிலையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவலர்களின் வீட்டில் வசித்து வரும் 45 வயதிற்க்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் சுமார் அரை மணி நேரம் மைதானத்தில் உட்கார வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பட்டனர்.