கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியானது. இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பட்டப் படிப்புகள்:
1: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு – ஐந்தரை ஆண்டு.
2: உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு – நான்கு ஆண்டு.
3: கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு – நான்கு ஆண்டு.
4: பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு – நான்கு ஆண்டு.
வயதுவரம்பு:
31.12.2019 அன்றுக்குள், 17 வயது முதல் 21 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக +2 வகுப்பில் இயற்பியல்,வேதியியல்,உயிரியல் போன்ற பாடங்களை பயின்று அதில் 179 முதல் கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
சாதி அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு, கட் ஆப் மதிப்பெண்களில் மாற்றங்கள் உண்டு.
மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.ac.in/UGRank/counselling/notification_ta.pdf இணையதள முகவரியில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.