களக்காடு அருகே சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் செல்வம் என்ற 65 மதிப்புத்தக்க பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஆட்டுக்கிடாய் வளர்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி மூன்று ஆடுகளை கொன்று விட்டு ஒரு ஆட்டை கடித்துவிட்டும் சென்றுள்ளது . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்தனர் .
இதையடுத்து மீண்டும் , நேற்று முன்தினம் முத்து நகரில் வசித்து வரும் மாரியம்மாள் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த இரு ஆடுகளை சிறுத்தை புலி கடித்து கொன்றுள்ளது. நேற்று காலையில் இதனைக் கண்ட மாரியம்மாள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினரிடம் கூறியுள்ளார் . இவ்வாறு சிறுத்தைபுலி நடமாடும் இடமானது மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதி என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள் . மேலும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூண்டு வைத்து சிறுத்தை புலியை பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.