பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் இருக்கும் டேனிஷ்பேட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 10ஆம் தேதி நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக மற்றும் அதிக நேரம் அவர்களுடனே சுற்றி வந்துள்ளார்.
இதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் மயங்கி கிடந்த நிலையை பார்த்து பதற்றத்துடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.