Categories
உலக செய்திகள்

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை… புதிய நடைமுறை அமல்… வியக்க வைக்கும் நாடு….!!!

ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய செயல்முறையை அந்நாடு அங்கீகரித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருதி புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப் படுத்தும் வகையில் உலக அளவில் பல கோரிக்கைகள் எழுந்தன.இதனால்  ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயினில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற செயல்முறையே  அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை அங்கீகரித்த முதல் நாடாக ஸ்பெயின் திகழ்கிறது. இதனால் பல நிறுவனங்கள் ஒன்று கூடி அந்த நடைமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

மேலும் இடதுசாரி அமைப்பு ஒன்று இந்த செயல்முறையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதுப்பற்றி  மாஸ்பெய்ஸ் என்ற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஸெக்டர்டெஜரோ கூறுகையில்  இந்த புதிய திட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த நடைமுறையில் பங்கேற்க உள்ளது . மேலும் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் 3ஆண்டு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 4 நாட்கள் மற்றும் 32 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு 50 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ஊதியத்தை குறைக்காமலும்  வேலையின்மை என்ற நிலையை ஏற்படுத்தாமலும்  அதிக உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் . மேலும் ஸ்பெயின் அரசு இந்த நடைமுறையை ஏற்கனவே பரிசோதனை முறையில்  செய்து வந்தது.

அதில் பணியாளர்களின் வேலை திறன் அதிகரிப்பதாகவும் ஊழியர்களின் பணி சூழலும் ஆரோக்கியமாக இருந்ததையும் உணர முடிந்து என்று  தெரிவித்துள்ளது.இந்நிலையில் இந்த அரசின் அணுகுமுறை கொரோனா காலத்தில் மற்ற நாடுகளும் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்ததாகவும் ‘தி கார்டியன்’ கூறியுள்ளது.மேலும் கொராேனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலும் வேலையின்மை அதிகரித்தால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஸ்பெயினில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது முன்னோடியாக திகழ்கிறது .

Categories

Tech |