Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த பகையும் கிடையாது… பின்வாங்க போவதில்லை… பாஜக செய்தால் மகிழ்ச்சி தான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, எந்த தனி நபரும் விரோதம் கிடையாது. கொள்கை அளவில் தான் ஒருவரை பேசுகின்றோம். பாஜகவாக இருந்தாலுமே கூட தனிநபர் யார் மீதும் வெறுப்பு கிடையாது. ஒரு தனிமனிதரை பார்ப்பதில் அவர்கள் கருத்துக்களை மாற்றவேண்டும், மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

அது பாஜகவாக இருந்தாலும் சரி, அதில் நான் தனி மனிதரை வெறுக்க கூடிய  ஒருவராக நாங்கள் இல்லை. யாருமே எங்களுக்கு வெறுப்பு கிடையாது. நாங்க வெறுப்பு அரசியலை பேசவில்லை. யார் வேணாலும் வரட்டும், எங்களுடைய கொள்கையில் நாங்கள் பின்வாங்க போவதில்லை, திசை மாறப் போவதில்லை, அதில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை.

எங்கள் கொள்கையை பிற கட்சிகள் ஏற்று கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.  நாங்கள் வைக்கக்கூடிய தமிழக உரிமையை பாஜகவே ஏற்றுக் கூட எனக்கு மகிழ்ச்சி தான், நடைமுறை படுத்தினால் மகிழ்ச்சி தான். ஏன் செய்யல ? அதனால தான் நாங்க வந்து விமர்சிக்கிறோம் என திருமுருகன் காந்தி கூறினார்.

Categories

Tech |