கல்லூரி வளாகத்தின் முன் காதலை அரங்கேற்றிய காதலி….. மாணவர் கட்டியணைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
பாகிஸ்தான் நாட்டில் முன்னணி கல்லூரியாக லாகூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றன. அந்தக் கல்லூரி மாணவி ஒருவர், தான் படித்து வரும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவனிடம் தன் காதலை கல்லூரி வளாகத்தின் முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது அனைத்து மாணவர்களும் அவர்களைப் பார்த்து வியந்து உற்சாகப் படுத்தி வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், “அந்த இளம்பெண் தரையில் மண்டியிட்டபடி தன் காதலனிடம் ரோஜாப்பூ கொடுத்து தன் காதலை சொல்லியுள்ளார். மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவன் பூவினை வாங்கிக்கொண்டு, காதலுக்கு சம்மதம் என்று அந்த பெண்ணை கட்டி அணைத்துக்கொண்டார்.
இக்காட்சியினை தனது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞன் ஒருவன் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அதன்பின் இந்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் சென்றுள்ளது. இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக அந்த காதல் ஜோடியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அதனைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை என்றும் கூறுகின்றன.
இதனால் கோபமடைந்த கல்லூரியின் உயர் அதிகாரி கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் அவர்கள் இருவரையும் அதிரடியாக நீக்கப்பட்டன. இதுதொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் போட்டோ ஷர்தாரி, காதலுக்கு எதிரான கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கருத்து ஒன்றினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.