Categories
உலக செய்திகள்

” Deeply deeply sorry “… மக்களிடம் மன்னிப்பு கேட்ட போரிஸ் ஜான்சன்… எதற்காக தெரியுமா…?

அரசு செய்த எல்லா செயலுக்கும் முழு பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மக்களிடம்  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்  .

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் தொழிற்கட்சி எம்.பி ரிச்சர்ட் பர்கன் , ” பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கடமையில் தோற்றுவிட்டார். ஆபத்தான விளைவுகள் ஏற்படும் வரை தனது செயல்பாட்டில் அவர் தாமதம் காட்டி வந்தார். இதனால் பிரிட்டனில் லட்சக்கணக்கான உயிர்கள் பறி போயுள்ளது. பறிபோன உயிர்களுக்கு மன்னிப்பு கேட்க உரிய நேரம் இது தானே? ” என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் Deeply deeply sorry  என்று பிரிட்டன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர்,  ” அரசு செய்த எல்லா செயலுக்கும் முழு பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில் தான் 1,25,900-க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பிரிட்டனில் கடந்த ஆண்டு பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை என்ன நிலவரம் உள்ளது என்பதனை அறிவதற்காக ஒரு பொது விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் குடிமகக்களும், மருத்துவ உள்கட்டமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |