டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடை துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடையை கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றியமைப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை டாஸ்மாக் கடை அந்த பகுதியில் இருந்து அகற்றப்படாததால் பொதுமக்கள் தங்களது குற்றச்சாட்டுகளை அளித்த வண்ணம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை அனுமதிக்கப் போவதில்லை என பொதுக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தால் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.