Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்க மக்களுக்கு சேவை செய்யுறோம்” அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட பணி…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பக்கத்தில் இருக்கும் வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகள் ஆண்டு தோறும் பொதுமக்களுக்கு சேவை புரியும் வண்ணம் தண்ணீர் மற்றும் நீர் மோர் வழங்குவதற்காக இந்த இடத்தில் பந்தல் அமைக்க உள்ளதாகவும், வேறு எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தாசில்தாரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே அகற்றப்பட்டுள்ளதாகவும், அப்போதே வருவாய் துறையினர் பாதுகாப்பு வளையம் அமைத்து அந்த இடத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் பலரும் அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |