Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. கொழுந்துவிட்டு எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கோபாலகிருஷ்ணன், தன்ராஜ், சேகர் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அரவை இயந்திரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு கழிவு பஞ்சுகளில் மளமளவென தீ பரவி விட்டது.

இதுகுறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் அரவை இயந்திரங்கள், ஒரு லட்சம் மதிப்புள்ள கழிவுப் பஞ்சு மூட்டைகள் நாசமாகி விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் காவல் துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |