குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறையில் கோமாளிகளுடன் உரையாடியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறைக்குள் கோமாளிகள் அனுப்பப்பட்டு சமையல் செய்ய தேவையான பொருள்கள் மற்றும் குறிப்புகள் கூறப்பட்டது. அந்த அறையில் பேசியவர் கோமாளிகளுக்கு எளிதில் புரியாதபடி சமையல் குறிப்புகளை கூறினார்.
இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த புகழ் அங்கிருந்த நாற்காலியை தள்ளிவிட்டு ரகளை செய்தார் . இந்நிலையில் இப்படி கோமாளிகளை கன்பியூஸ் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவி பிரபலம் குரேஷி தான் அந்த அறையில் கோமாளிகளிடம் பேசியுள்ளார்.