மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டம் கரோராவில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்துக் கொடுக்கபடுவதாக புகார் எழுந்தது. உணவு சமைப்பது பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமையல் பொருள்கள் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் போன்றவைகளும் கழிவறையில் வைக்கப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்களா எனக் கேள்வி எழுப்பினார்.குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம்.
நான் நமது வீடுகளில் பாத்திரம் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம். அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மாவட்ட அதிகாரி முறையாக சமையலறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்