மறைந்த முதல்வர் ஜெயலலிதா மன உளைச்சலால் உடல்நலம் குன்றியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒட்டு மொத்த தமிழ்நாட்டினுடைய எண்ணம்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டனுடைய எண்ணம்… அம்மாவுடைய மரணம் குறித்து உண்மை நிலை அறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அந்த எண்ணத்தை வந்து செயல்படுத்தும் வகையில் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அதற்கான தடை இருக்கு. முதல்வர் என்ன சொன்னார் ? மனம் உளைச்சல்… மன உளைச்சல் யாரு ஏற்படுத்துனா சொல்லுங்க ?
கிட்டத்தட்ட பல வகையில் அம்மாவுக்கு மனம் உளைச்சல் ஏற்படுத்தி, அந்த மனம் உளைச்சலால்…. அம்மா பெரிய அளவுக்கு மனம் பாதிக்கப்பட்ட நிலையில தான் உடல் நிலை குன்றியது. விசாரணை ஆணையம் எல்லா வகையிலும் விசாரணை பண்ணும் என அமைச்சர் தெரிவித்தார்.