Categories
உலக செய்திகள்

அதோ பாருங்க… அதுதான் என்னோட திருமண பரிசு… கணவரை திக்குமுக்காட வைத்த மனைவி…!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் கணவருக்கு ஆடம்பர படகு ஒன்றை திருமண பரிசாக கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

நாம் அனைவரும் பொதுவாக கணவருக்கு திருமண பரிசு வழங்குவதற்காக விலை உயர்ந்த சிறுசிறு பொருளை பரிசளித்திருக்கிறோம் ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் அனைவரையும் நெகிழ வைக்கும் அளவிற்கு தன் காதல் கணவனுக்கு பரிசளித்துள்ளார்.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரைச் சேர்ந்தவர்கள் ஜனீன் சோலார் மற்றும் ட்ரெடெரிக் க்ரேவு இவர்கள் இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. மேலும் மனைவி கணவனுக்கும் கணவன் மனைவிக்கும் பரிசு கொடுப்பது வழக்கமாக உள்ளது .

அதேபோல் ஜனீன் ஆசை காதல் கணவனுக்கு  தன் அளவுகடந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் விலைஉயர்ந்த படகை  காண்பித்தார்.அதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். அதைக் கண்ட ஜனீனியின் காதல் கணவன் ட்ரெடெரிக்  அந்த படகை கண்டு ஆனந்தத்தில் கண்கலங்கி தன் மனைவியை கட்டி அணைத்து அழுதார். மேலும் திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் வியந்தனர்.

Categories

Tech |