Categories
உலக செய்திகள்

செல்பி எடுக்க இடம் இல்லையா….? முதியவர் செய்த முயற்சி…. நேர்ந்த சோக முடிவு…!!

கனடாவில் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுக்க முயற்சி செய்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர். இவர் சம்பவத்தன்று வான்கூவர் உள்ள லைட்ஹவுஸ் பூங்காவிற்கு சென்றுள்ளார். மேலும் அந்த நபர்  அங்கிருந்த செங்குத்தான பாறையின் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். அப்போது திடீரென கால் இடறியதால் அவர் பாறையின் அருகில் இருந்த குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள்  உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |