Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. பஞ்சு நூற்பாலைகளுக்கு மட்டும் கொடுங்க…. தொழில்துறையினரின் அறிக்கை…!!

தொழில்துறையினர் இந்திய பருத்தி கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு வினியோகம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பின்னலாடை தயாரிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பின்னலாடை வர்த்தகமும் நூல் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து விலை உயர்வு காரணமாக நூற்களை பதுக்கி வருவதாகவும், அதனை தடுக்கும் வகையில் இந்திய பருத்தி கழகம் நூல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு விநியோகம் செய்யப்பட வேண்டுமெனவும், மற்றவர்களுக்கு பஞ்சு விநியோகம் செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |