இரண்டு வயது குழந்தையை குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் மானசா என்ற பெண்ணுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு குறைகள் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. அது வளர வளர அதற்கு குறைகள் உள்ளது தெரியவந்தது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதும் இதனை குணப்படுத்த முடியாது என்று கூறியதால், விரக்தியில் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த மூத்த பாட்டிகள் இரண்டு பேர் அந்த குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.
நேற்றையதினம் குழந்தையை அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கிப் போட்டு குழந்தை இறந்து போகும்வரை கிணற்றின் அருகே நின்று பார்த்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றனர். அக்கம்பக்கத்தினர் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு இவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.