கொரோனா பாதித்த தாயுடன் பச்சிளம் குழந்தை இருக்கலாமா ?என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தொகுப்பு உள்ளது.
ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல் ஒன்றில் குழந்தை பிறந்த பிறகு பெற்றோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. குறிப்பாக குறைந்த அளவில், மிக விரைவில் பிறந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருக்கும் முக்கியத்துவத்தை குறித்து அதில் கூறுகிறது. இருப்பினும் பல நாடுகளில் கொரோனா தாய்க்கு உறுதி செய்யப்பட்டபின் பிறந்த குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து அவர்களை வாழ்நாள் முழுவதும் சுகாதார சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன.
குழந்தை உயிரிழப்பு அதிகமாக நடைபெறும் ஏழ்மையான நாடுகளில் இது இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கங்காரு தாய் பராமரிப்பு முறையில் பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தையை தாயிடம் இருந்து பிரித்தால் அது இன்னும் மோசமாகிவிடும். கங்காரு பராமரிப்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றமுடியும். குறிப்பாக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பிரசவம் மிகவும் முக்கியமானது.
நோய்த்தொற்று இருந்தாலும் சில குழந்தைகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு தரத்தை கடுமையாக பாதித்துள்ளன. அவர்களின் பெற்றோர்களுடன் தேவைப்படும் உயிர்காக்கும் தொடர்புடைய உரிமையும் உள்ளடக்கியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றில் இருவர் தொற்றால் பாதிக்கப்பட்ட தாயிடம் குழந்தையை அனுமதிப்பதில்லை என்று ஆய்வு வெளியாகியுள்ளது. இதுவரை பிறந்த குழந்தைகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் கூட இல்லை என ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் இறப்பதற்கான ஆபத்தும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.