டெல்லி அருகில் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வயதான தாயை மகன் அறைந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி துவாரகாவில் 76 வயது தாயுடன் மகன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் ஏதோ வாக்குவாதம் நடைபெற்று வந்தது. வாக்குவாதம் முற்றவே அந்த மகன் தாயை ஓங்கி அறைந்தார். இதில் அந்த தாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த ஒருவர் அந்தத் தாயை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.