Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங்’… திருமணவிழாவில் மணமக்களுடன் ஆடிய பிரபல டான்ஸ் மாஸ்டர்… வைரல் வீடியோ…!!!

பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா திருமண விழாவில் மணமக்களுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள்  கொண்டாடினர்.

https://twitter.com/Thenamebala/status/1372366446882295811

மேலும் இந்தபடத்தில் இடம் பெற்ற  வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா திருமண விழாவில் மணமக்களுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |