Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் மாட்டிக்கொண்ட பாஜக அமைச்சரின் வாக்குமூலம்…பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் வீடியோ …!!!

கர்நாடகாவில்   பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பாலியல் வழக்கில் சிக்கியதால் விசாரணை குழுவினரிடம்  ,வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ரமேஷ் ஜர்கிஹோலி. இவர் சில தினங்களுக்கு முன்  விடுதி ஒன்றில், இளம்பெண் ஒருவருடன் அரைகுறை ஆடையில் ஆபாசமான நிலையிலிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி கர்நாடக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.சம்பந்தப்பட்ட இளம்பெண் வட கர்நாடக பகுதியை சேர்ந்தவர் என்றும், மாநிலத்திலுள்ள அணைகள் பற்றிய ஆவணப்படம்  எடுப்பதற்கு அமைச்சரின் உதவியை நாடினார் .

இந்நிலையில் அமைச்சர் அந்தப் பெண்ணிற்கு அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி ,  அந்தப் பெண்ணை மயக்கி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அமைச்சர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் , தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வழங்கியுள்ளார்.இதில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார் . .

இந்த வீடியோவால்   மன உளைச்சலுக்கு ஆளான நானும் ,என் பெற்றோரும்  தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டோம் .  இந்த வீடியோ வெளியானதால் என் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும், இதனால் அமைச்சரிடம் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்றுமாறு கண்ணீருடன் அந்த  வீடியோவை  பதிவை வெளியிட்டார். நேற்று  முன்னாள் அமைச்சர்  ரமேஷ் ஜர்கிஹோலியிடம்  விசாரணை நடத்தப்பட்டதில்  தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

அவர் கூறும்போது ,அந்த ‘வீடியோவில் இருப்பது நான் இல்லை ‘, என்னிடம் பணம் பறிப்பதற்காக அதை காட்டி என்னை மிரட்டினர். நான் அதற்கு ஒத்துழைக்காததால், இந்த வீடியோவை வெளியிட்டு எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளனர், என்று தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்தார். அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சித்த போது, அந்தப் பெண்  விசாரணைக்கு ஒத்துழைக்காமல், தலைமறைவாக உள்ளார். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளார் என்று அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |