தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மக்களிடையே நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் மநீம தலைவர் கமலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வருவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, தன்னுடைய சொந்த பணத்தில் தான் செல்கிறேன் என்று விளக்கம் கூறியுள்ளார்.