Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களவையில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பிரிட்டன் சுகாதார செயலாளர்..!!காரணம் என்ன?

பிரிட்டனுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தாமதம் செய்தாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பெருமைப்படுவதாக பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம்  ஏற்பட்டாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரிட்டன் பெருமைப்படுவதாக இன்று மக்களவையில் உரையாற்றிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில்,சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா பிரிட்டனுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் தடுப்பூசி தயாரிப்பதில் முழு ஈடுபாடுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேஜா உடன் இணைந்து இந்த ஆண்டு மட்டுமே ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்கிறது. இதனால் அந்நிறுவனத்துடன் நமது கூட்டாண்மை பெருமைப்படக்கூடியது என்று மாட் ஹான்காக் கூறியுள்ளார்.மேலும் அவர் இந்தியாவிற்கு இதனால் நன்றி தெரிவித்துள்ளார் .

Categories

Tech |