ஜெர்மனியில் திருச்சபையில் மத குருக்களால் 40 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் கத்தோலிக்க மறைமாவட்டம் Cologne என்ற நகரில் அமைந்திருக்கும் RCI என்ற திருச்சபையில் உள்ள மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 300க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது.
சுயாதீன ஆய்வு ஒன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்த ஆய்வு குழுவானது 800 பக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த ஆயிரத்து 1975 வருடம் முதல் 2018 ஆம் வருடம் வரை சுமார் 314 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுமார் 202 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்படைந்த பெண்களில் பெரும்பாலானோர் 14 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த அறிக்கை தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.