பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இரு வரும் பேசி உறுதி செய்துகொண்டனர்.பின்னர் இம்ரான்கான், அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லையென்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் அதிக நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்க்கு எதிராக கொண்டுவர வேண்டுமென அமெரிக்கா பெரிதும் எதிர்பார்க்கின்றது என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.