Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! ஆட்சியில் இல்லை…! இப்படி பண்ணுறீங்க… திமுகவை தோலுரித்த அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியில் அம்மாவுடைய அரசும்,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு இருக்கும்போது மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சுண்டல் விற்கிறவுங்க நிம்மதியா இருக்கலாம். ப்யூட்டி பார்லரில் இருக்குறவுங்க நிம்மதியா இருக்கலாம். பிரியாணி கடை நிம்மதியா இருக்கு. நடைபாதை சாலையோர வியாபாரிகள் நிம்மதியா இருந்தாங்க. எந்த வசூலும் இல்ல, எந்த அடாவடிதனம் இல்லை, ரௌடிசம் இல்லை.

திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால் வருவதற்கு முன்னாடியே எந்த அளவுக்கு அராஜகம் பண்ணுறாங்க. எதிர்கட்சியா இருக்கும்போதே சுண்டல் விக்குறவர் அடிப்பட்டார், ஓசி டீ கேட்டு டீ கடையில அடிச்சாங்க, ஓசி பிரியாணி கேட்டு அடிச்சான், பியூட்டி பார்லரில்  பெண்களை அடிச்சான். இது எல்லாமே சமூக வலைத்தளம் மூலமாக பட்டவர்த்தனமா தெரிஞ்சது.

ஒரு எதிர்க்கட்சியாக இருக்குற சூழ்நிலையில் இப்படீன்னா… மக்கள் அதை உணர்ந்து இருக்காங்க. திமுகவை பொறுத்தவரையில் அராஜக கட்சி, அநியாயத்தை செய்கின்ற கட்சி. எந்த நிலையிலும் இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் தெளிவா இருக்காங்க. அதோட வெளிப்பாடு தான் திமுகவினர் ஒவ்வொருத்தருடைய பேச்சும் இருக்கு. ஆர்.எஸ்.பாரதி திமிரான பேச்சு… நீதியரசர் எல்லாம் நாங்க போட்ட பிச்சை அப்படின்னு சொல்லுவாரு. மறுநாள் திடீர்ன்னு பல்டி அடிச்சு மன்னிப்பு  கேட்பாரு.

ஜாதியை சொல்லி திட்டுறது, அடாவடித்தனம் பண்றது என சர்வ சாதாரணமா செய்யுறது திமுகவுக்கு கை வந்த கலை.ஒரு பண்பாடு இல்லாத ஒரு வகையில் தான் திமுக கட்சி இருந்துட்டு இருக்கு. ஆனா எங்க ஆட்சி பத்து வருஷம் இருந்த காலத்தில் இப்படி எதுவுமே நடக்கல. மதுரையில் சாராயம் விற்றது திமுக. அதற்க்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விக்குறாங்கனு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதற்க்கு மதுரையில் பெண் கவுன்சிலர் லீலாவதியை பட்டப்பகலில் குளோஸ் பண்ணிட்டாங்க. அதே போல தா.கிருஷ்ணனை கொன்னுட்டாங்க. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு, பத்திரிக்கையாளர்களுக்கே  பாதுகாப்பு இல்ல திமுக ஆட்சியில்… இந்த மாதிரி எல்லாம் மக்கள் உணர்ந்து இருக்கு நிலையில், அதனுடைய வெளிப்பாடுதான் இன்று நடந்துள்ளது தான் செந்தில்பாலாஜியின் பேச்சும் அப்படி தான் இருக்கு. ஆட்சிக்கு வர போறது இல்ல. ஆனா அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசுறாரு.பொதுவாகவே இயற்கையை பேணி பாதுகாப்பது தான் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எண்ணம்.

ஆற்று மணலை எவ்வளவு வேணாலும் எடுத்துக்கோ… எந்த அதிகாரி கேட்டாலும் அவனை ஒரு கை பார்த்து விடுவேன்னு சொல்லுறது எப்படி பட்ட மிரட்டல் ? இது. ஆட்சியில் இல்ல…  தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தா என்ன ஆகும் நிலைமை ? தமிழ்நாடு ஒட்டு மொத்தமா ரவுடிகளின்  ராஜ்யம், அராஜகத்தை உச்சகட்ட ஆட்சி… எங்கு பார்த்தாலும் கொலை,  கொள்ளை எல்லாம் சர்வசாதாரமான நடக்கின்ற நிலை தான்  தமிழ்நாட்டில் திமுக தப்பி தவறி ஆட்சிக்கு வந்தா நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |