பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாக எழுந்த விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான்கான் கூறுகையில் ,
பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் இயங்கி வந்த தீவிரவாத குழுக்களை சரணடைய வைக்க தைரியம் இல்லாமல் இருந்தனர்.ஏனெனில் நாட்டில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்திய நிலையில் , பயிற்சி எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் சில பகுதிகளில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர்.மேலும் பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களை ஒழிக்கும் முதல் அரசாக எங்களது அரசு உள்ளது என்று பேசினார்.