Categories
உலக செய்திகள்

” அவர் ஒரு கொலைகாரர் “… புதினை விமர்சித்த பைடன்… மன்னிப்பு கேட்க வற்புறுத்தும் மூத்த எம்.பி…!!

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற பைடனின் கருத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம்  ABC நியூஸ் நேர்காணலின் போது ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  அவர் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அந்த நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு சரியான பதிலடி கொடுப்பேன் என்று கூறினார்.

ஆனால் அதே சமயம் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபரின் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்ய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஷ்யாவின் மூத்த எம்பி  ஒருவர் கூறினார். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாங்கள் அதற்கு சரியான பதிலடி கொடுப்போம் என்று கூறினார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்று கூறிய  ஜோ பைடனின் அறிக்கைக்கு புதின் கூறியதாவது,  ” பைடன் கூறியதுபோல் நாங்கள் தனிப்பட்ட முறையில் தான் அறிமுகம் ஆனோம். நான் இந்த விஷயத்தில் அவருக்கு என்ன பதில் சொல்வேன்? பைடன் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதனைத் தான் நான் விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் இந்த கருத்தை நான் நகைச்சுவையாக கூறவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |