கரூர் மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தூய்மை பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து வயிற்று வலியும் ஏற்பட்டதால் ஐயப்பன் வலி தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் துடித்த ஐயப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க தாந்தோனிமலை சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு வந்து ஐயப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.