100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கலெக்டர் மாட்டுவண்டியில் சென்று பொதுமக்களுக்கு வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனை அடுத்து கலெக்டர் விழிப்புணர்வு மனித வள மையத்தை திறந்து வைத்து வைத்துள்ளார். அப்போது கலெக்டர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டு வண்டி பேரணியை தொடங்கி வைத்து, மாட்டு வண்டியிலேயே வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பிதழை வழங்கியுள்ளார்.