Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் தீவிர சோதனை… ஆவணம் இல்லாமல் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

மயிலாடுதுறை சீர்காழி அருகே ஆவணம் கொண்டு செல்லப்பட்ட 30 பவுன் நகையை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 30 பவுன் நகைகள் காரில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நகையை கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த நகைக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் நகையை பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்த நகைகளை சீர்காழி தாசில்தார் ஹரிஹரனிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் நகைக்கான உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு நகையை எடுத்து செல்லுமாறு காரில் வந்தவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |