காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் வரதராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இந்நிலையில் வரதராஜனும் குடும்பத்தார்களும் உத்திரமேரூரில் தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்கள் . அங்கு வரதராஜன் தனது குழந்தையை கவனிக்காமல் விசேஷத்தில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அப்போது அவரது குழந்தை உறவினர் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது . அப்போது எதிர்பாராமல் தொட்டியினுல் தடுமாறி விழுந்த குழந்தை வெளியே வர முயற்சித்தும் முடியாமல் மயங்கிருக்கிறது.
சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாது தேடிய பெற்றோர்கள் பின்புறம் சென்று பார்த்த போது தொட்டிக்குள் மயங்கி கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். பின்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர் . இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.